அமரர் இராமலிங்கம் தயாபரராசன்
(தயா)
அன்னை மடியில் : 18 நவம்பர் 1960 — ஆண்டவன் அடியில் : 7 ஒக்ரோபர் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தயாபரராசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்கள் வாழ்ந்த காலங்கள் அதிகமில்லை- ஐயா
ஐம்பத்தெட்டு ஆண்டுகள் தான்! ஆனாலும்
மண்சலிக்க மற்றவர் மனம் சலிக்க வாழவில்லையே- என் ராசா
உங்கள் பிள்ளைகளின் பெருவாழ்வு வாழ்வதனைக் காண
கொடுப்பனவு கிடைக்காமல் போனதேனோ?

மண்பற்று... தமிழ்ப்பற்று... சமூகப்பற்று...
அனைத்தும் நிறைந்த மனிதராய் இருந்தீர்கள்!
மானிட நேசிப்பிலும்... நட்பை... உறவுகளை...
அரவணைப்பதிலும் விளைநிலமாய் இருந்தீர்கள்
பிறர் நலம் பேணும் பெருந்தகையாளனாய்
தொண்டனாய்... தோழனாய்... நண்பனாய் அரவணைத்தீர்
உறவுக்கும்... உரிமைக்கும்... உம் கரம் கொடுத்தீர்
எல்லோர்க்கும் சொந்தக்காரன் என்றன்றோ வாழ்ந்தீர்
இத்தனைச் சிறப்புக்களும் உம்மிடத்தில் கொண்ட எம் ராசாவே
அத்தனையும் எம்மை சொல்லியழ ஏன் வைத்தீர் ஐயா?

காகம் பறக்கவில்லை! கனவில் கூட காலன் சொல்லவில்லை!
தேகம் பதறவில்லை! எமக்கு சொல்லாமல் சென்றதேனோ?
நீ பெற்ற மூன்று முத்துக்களை அப்பா எங்கே என தேடவிட்டு
உடன் பிறந்த தம்பி, தங்கையரை பாசத்தில் நனைய விட்டு
அப்படியென்ன அவசர பயணம் ஐயா!

மாண்டவர் மீண்டும் வரார் என்பதை நாம் அறிவோம்- ஆனாலும்
நீங்கள் என் காவல் தெய்வமே வரமாட்டீர்களா?
கனவிலாவது வந்து எங்கள் கண்ணீரைத் துடைப்பீர்கள்
என நினைத்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனின் பாதார விந்தங்களை சென்றடைய பிரார்த்திக்கின்றோம்!

எங்கள் வீட்டுக் காவல் தெய்வம் எம்மை விட்டுப் பிரிந்த துயரில் செய்வதறியாது நாம் துயரத்தில் நின்ற போது தங்கள் வீட்டுத்துயரம் போல ஓடோடிவந்து உதவிகள் புரிந்ததோடு, அதன் பின்னர் நடைபெற்ற கிரியைகளிலும் முன்னின்று உதவிகள் செய்து அனைத்திலும் கலந்து கொண்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் இரு கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நினைவுநாள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதால் இந் நிகழ்விலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல பெருங்காடு அருள்மிகு முத்துமாரியம்மனை வேண்டிக் கொண்டு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark