அமரர் கஜனி சுபேந்திரன்
(சுட்டி, தலைவர் மற்றும் ஸ்தாபக உறுப்பினர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், பிரித்தானியக்கிளை)
மலர்வு : 26 ஏப்ரல் 1968 — உதிர்வு : 13 நவம்பர் 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஜனி சுபேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark