அமரர் இராசம்மா திருநாவுக்கரசு
இறப்பு : 9 செப்ரெம்பர் 2018

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் நிறைகுடமாய்
குடும்பத்தின் தலைவியாய்
பற்றோடு பாசமதை
நட்போடு பகிர்ந்தளித்து
மெய்யான அன்புதனில்
எல்லோர்க்கும் இரங்கி நின்றீர்!

நீங்காத நினைவுகளை
நிழலாட வைத்துவிட்டு
நேசம் கொண்ட சொந்தங்களை
பாதியிலே தவிக்கவைத்து
தொலைதூரம் சென்றதேன்….

ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் கொண்டு
வேரென நீர் இருந்து
வீழ்ந்திடாமல் காத்தவரே
நேசம் கொண்ட நெஞ்சங்கள்
பாசமுடன் பரிதவிக்க
பாரைவிட்டு சென்றதேனோ…

அனுதாபம் தெரிவிப்போர்
சிறீஸ்கந்தராஜா குடும்பம்- லண்டன்(பெறாமகன்)
புஸ்பராஜா குடும்பம்- லண்டன்(பெறாமகன்)
ச. சங்கரப்பிள்ளை குடும்பம்(இளைய அக்கா- கைதடி)

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark