அமரர் தெய்வநாயகி ஆறுமாமுகப்பெருமாள்
(குஞ்சாச்சி)
அன்னை மடியில் : 7 சனவரி 1923 — இறைவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2018

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வநாயகி ஆறுமாமுகப்பெருமாள் அவர்களின் நன்றி நவிலலும், 31ஆம் நாள் நினைவஞ்சலி அழைப்பிதழும்.

அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!

மாதம் ஒன்று சென்றதோ.!
ஆறவில்லை எங்கள் துயரம் அம்மா...!
தூக்கமின்றி எம்மையெல்லாம்
காத்து நின்றாய் அம்மா...!

அன்புக்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது.

உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

அன்னார் சிவபதமடைந்த செய்தி கேட்டவுடன் ஓடோடி வந்து உதவிகள் புரிந்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலரஞ்சலிகள் மூலமும், தொலைபேசி மூலமும் தம் இரங்கல்களை வெளிப்படுத்தியவர்களுக்கும் எமது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இரண்டாம் மாடி, AVS மண்டபம், No-8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைத்தியகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776220113
ரவிக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447942866961
Loading..
Share/Save/Bookmark