அமரர் இராசையா தையல்நாயகி
(நாயகம்)
பிறப்பு : 7 மே 1927 — இறப்பு : 6 யூன் 2008
திதி : 17 மே 2018


யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தையல்நாயகி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கொள்ளித்தணல் வெந்து தணித்தது உன் உடலை
தசாப்தம் கழித்தும், உன் நினைவை அழிக்க மறந்து விட்டது
இன்னமும் எம் மனம் உணர்கிறது
உன் உயிர் அற்ற மறைவை உணர மறுக்கிறது
இந்த அறிவற்ற இதயம் நீ இல்லை என்பதை
உன்னை நினைக்கையில்
ஒரு கணம் துடிக்க மறுக்கிறது எம் இதயம்

தூண்டிலில் அகப்பட்ட மீனின் வலியை
அக்கணம் துடித்தபடியே உணர்கிறது எம் இதயம்
புகைப்படம் சொல்லும் உன் புறத்தின் அழகை
கலப்படம் இல்லாத புன்னகை சொல்லும்
உன் அகத்தின் அழகை வசப்படும் உன் அன்பு
உன்னோடு ஒரு நிமிடம் பேசினால்
அகப்படும் எம் மனது- உன் மனம் குழையும் பேச்சில்

நீ விதைத்த விதையில் தோன்றினோம் நாங்கள்
எம் தாயை கூட அம்மா என்று
ஒருமுறை தான் அழைத்தோம் - உன்னை தானே
அம்மா அம்மா(அம்மம்மா) என்று அழைத்து
இரு தாயின் அன்பை கண்டோம்
இன்னும் எம்மனம் நினைத்துப்பார்க்கிறது
உன்னோடு வாழ்ந்த அழகிய நாட்களை
உன் மெய்யுள் ஓடிய உதிரம் எம்முள் ஓடும் அந்நாள் வரை,
செய்யுள் போல் இருதயம் சொல்லும் உன் பெயரை...

உன்னை நினைத்த படியே
கடைசி வரிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்
எம் கண்ணீர் துளிகளால்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark