அமரர் தெட்சணாமூர்த்தி நாகமுத்து
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1950 — இறப்பு : 16 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அணைத்தும் அணையாத தீபமாய் எமக்கு ஒளி கொடுத்து எம்மை வாழவைத்த எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகிய தந்தையார் திடீரென நோய்வாய்ப்பட்டபோதும், வைத்தியசாலையில் இருந்தபோதும் வந்து பார்த்து உதவியவர்களுக்கும், தந்தையாரின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், தந்தையின் மரணச்செய்தியை இணையத்தளம், முகப்புத்தகம் ஆகியவற்றில் வெளியிட்டவர்களுக்கும்,  அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் மேலும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளில் பங்கேற்று உதவியவர்களுக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 50 rue de Torcy 75018 paris metro marx Dormoy மண்டபத்தில்  நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Loading..
Share/Save/Bookmark