அமரர் கார்த்திகேசு கனகரெத்தினம்
(கனகலிங்கம், கனகு)
அன்னை மடியில் : 10 டிசெம்பர் 1945 — ஆண்டவன் அடியில் : 9 பெப்ரவரி 2015

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கனகரெத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று ஆயினும்- உங்கள்
நினைவுகள் தித்திப்பாய் எங்கள் மனங்களில்
அப்பா 
அப்பா என்று அழைத்தால் அன்பு முகம்
காட்டும் நீங்கள் அற்ப ஆயுளில்- எங்கள்
அனைவரையும் விட்டு சென்றதேனோ?

அருகில் இருந்து பார்ப்பீர்கள் என்று நினைத்தோம்
எங்களை அனாதரவாய் விட்டு சென்றதேனோ?
நிலையில்லா இவ்வுலகில் எங்களை விட்டு விட்டு
நிலையான அவ்வுலக வாழ்வைத் தேடி
நித்தம்
இறைவனை பூஜிக்க நீண்ட துயில் கொண்டீர்களோ?

அப்பா, அப்பா என்று உங்கள் நினைவோடு- இங்கு
வாடிக்கிடக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு
நிழலாக நின்று வழிகாட்டுவீர்கள் என நினைத்து
உங்கள் திருவடியை வணங்கி ஆத்மா சாந்தியடைய
ஐந்துகரத்தானை வேண்டி நிற்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark