அமரர் ரேணுகா தவயோகராஜன்
தோற்றம் : 13 செப்ரெம்பர் 1980 — மறைவு : 9 பெப்ரவரி 2016

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உங்கள் நினைவுகளால் நித்தமும்
கலங்குகின்றோம் அம்மா!

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
என்னை என்றும் வாட்டுதையோ!
ஆறா துயர் தந்து மீளாத்துயில்
கொண்டாய் - நீ வருவாய் என்று
நான் காத்திருந்த காலங்கள் போய்
இன்று ஆண்டு இரண்டாகி விட்டது

இரண்டாண்டு என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலனவன் உங்களை அழைத்துவிட்டான்
உங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலத்தின் மடியில் துயில் கொள்ளும்
 உங்களை தினம் தினம் நினைத்து
ஒன்று கூடி நாங்கள் உறவாடும் போது
எங்கள் மத்தியில் நீங்களும் வந்து
உறவாடுவீர்கள் என்று நம்புகின்றோம்!

உறவுகளை கட்டி அணைக்கும்
உயர்ந்த பண்பினாலும், கபடமற்ற சிரிப்பினாலும்
நேர்மையான செயல்களாலும் எல்லோர் மனதிலும்
இடம் பிடித்து மறைந்தும், மறையாது வாழும் தாயே !
நெஞ்சடைக்கும் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டே

எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447828616189
Loading..
Share/Save/Bookmark