அமரர் மார்க்கண்டு மனோகரசீலன்
அன்னை மடியில் : 24 சனவரி 1962 — ஆண்டவன் அடியில் : 9 நவம்பர் 2016
திதி : 29 ஒக்ரோபர் 2017


யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மனோகரசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே- தந்தையே
இப்பூலோக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஒன்று கடந்ததுவோ?

உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
வாழ்வான உயர்வாழ்வு எமக்கு
அமைத்திட்டீர்கள்

உங்களை வாழவைக்கும் காலம் இனி
என மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

உங்களை இழந்த கணம்முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்

உருத்திரபுர உறவுகளின் உயர்வே
எங்கள் வாழ்வாதாரமே!
எங்கள் மனமெல்லாம் நிறைந்து
பேரன்பில் வாழ்கின்றீர்கள்
அழிவற்ற ஆன்மாவினால் எங்களை
நாளும் காத்தருளும் தெய்வமே!

ஆன்ம சாந்திக்காக பொறிக்கடவை
அம்மன் அருள் வேண்டிப் பணிகின்றோம்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

அன்னாரின் ஓராண்டு நினைவஞ்சலி நினைவாக குடும்பத்தினரால் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Loca'Salle Eragny, 6 Rue de la Palombe, 95610 Éragny, France எனும் முகவரியில் வழங்கப்படும் மதியபோசனத்தில் கலந்துகொண்டு எங்களை ஆறுதல்படுத்துமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33130323847
சுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33650994913
சன்னா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33629831355
கண்ணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605833898
கணேஸ்(தேன்சுரபி- சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33624405714
மதி(நவம்- மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33615179268
கயேந்திரா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33623700159
சித்திராங்கன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33646808173
Loading..
Share/Save/Bookmark