அமரர் கனகம்மா நவராசா
மண்ணில் : 1 யூலை 1947 — விண்ணில் : 30 யூலை 2015
திதி : 7 ஓகஸ்ட் 2017


யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராண்டு சென்றதம்மா

ஈராறு மாதம் சுமந்தவளே
இமையாய் எமைக் காத்தவளே
இதயத்தின் முன் வைத்தவளே
இரவிரவாய் எமக்காய் உழைத்தவளே

பதினாறும் பெற்றுத் தந்தவளே
பலதையும் ஊட்டி வளர்த்தவளே
பகலிரவாய் எமக்காய் விழித்தவளே
பலருக்கும் கை கொடுத்தவளே

என் தாயே
உன் கடமை முடிந்ததென்று
உலகைவிட்டுச் சென்றீரோ
உறவிருந்தும் உமைமுந்த
இவ் உலகிலெவனும் பிறந்தாரோ

என் தாயே
பக்கத்தில் நீயிருந்து
பக்குவமாய் பலகதைகள்
பாசமாய் பகிரும் நாளை
பகலிரவாய் எண்ணுகிறோம்
பத்தென்ன பலவிருந்தும்
சத்தியமாய் கிடைக்கலையே

என் தாயே
அருகினில் நீயிருக்கும்
அன்னாளை எண்ணுகையில்
ஆண்டவரே வந்தாலும் என்
அன்னை போல் ஆகிடுமோ

ஆண்டுகள் இரண்டு சென்றும்
உம் நினைவே எம்முடனே
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark