பிறப்பு  இறப்பு
30 செப்ரெம்பர் 1929  30 யூன் 2012
அமரர் செல்லையா இலகுப்பிள்ளை
(இளைப்பாறிய அதிபர்- யாழ். புங்குடுதீவு Sir Thuraisamy வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை)
பிறப்பு  இறப்பு
16 டிசெம்பர் 1935  7 யூன் 2012
அமரர் இலகுப்பிள்ளை நாகம்மா

செல்லையா இலகுப்பிள்ளை

திதி : 05-07-2017

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

இலகுப்பிள்ளை நாகம்மா

திதி : 13-06-2017

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலகுப்பிள்ளை நாகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பெற்றெடுத்துப் பெயர் சூட்டி பேரழகாய்த் தாலாட்டி
கற்றவராய் உலகத்திலே எமை வாழவைத்த தெய்வங்களே!
மண்ணிலே பெருமை மிக்க மானிடரை உருவாக்கி
புண்ணியராய் இவ்வுலகின் புகழோடு வாழ்ந்தவர்களே!

அன்பு முகம் எங்கள் நெஞ்சில் அழகாக நிலைத்திருக்க
எங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ!
பேரக் குழந்தைகளை ஆரத்தழுவிய உங்கள்
பேரன்பை இன்றும் நாம் மறக்கவே முடியவில்லை
உங்களைப் போல் தெய்வங்களை இவ்வுலகில் கண்டதில்லை!
பொங்குகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கும் யாருமில்லை

பாணாவிடைப்பெருமான் பாதமலர் சென்றடைந்து
பேரானந்தப் பெருவாழ்வில் பேறுபெற்று வாழ்கவென்று
ஆராதனை செய்து அடிதொழுது நிற்கின்றோம்
ஆத்ம சாந்திக்காக அனைவரும் வணங்குகின்றோம்!!!

உங்கள் பிரிவால் துயருறும்
கணேசமூர்த்தி(பக்ரைன்), திரு(கனடா), கோணேஸ்வரமூர்த்தி(லண்டன்),
லோகேஸ்வரி(லண்டன்), உதயமூர்த்தி(லண்டன்)

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+447940105394
செல்லிடப்பேசி:+447872609257
Loading..
Share/Save/Bookmark