அமரர் ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு
மலர்வு : 5 பெப்ரவரி 1975 — உதிர்வு : 9 சனவரி 2015

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்


உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?


அப்பா எங்கே என்று அன்பு மகள் தினம் கேட்பாள்
அள்ளி அணைத்து நான் அர்த்தம் தான் என்ன சொல்ல?
ஆயிரம் பொய் சொல்லி ஆறுதல் நான் சொன்னாலும்
ஆறிறுமா எந்தன் மனம் அதை நினைக்கையிலே


மணி அவளின் செயல்களிலே மனம் உன்னைத் தினம் காணும்
காணும் போதெல்லாம் கண்ணீர்தான் கரைந்தோடும்
வாழும் நாள் வரைக்கும் உன்னை நினைத்திருப்போம்
நினைவுகளோடு நாம் நிறைவாக வாழ்ந்திடுவோம்


ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அன்பு கொண்ட உன் வதனம்
அருகில் இருப்பது போல் உணர்கின்றோம்
அன்பால் என்றும்

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு


ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


உங்கள் பிரிவால் துயருறும் தாய், மனைவி, மகள், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
குடும்பத்தினர்(சுவிஸ்)
Loading..
Share/Save/Bookmark