திரு கந்தையா புலேந்திரன்
பிறப்பு : 18 நவம்பர் 1955 — இறப்பு : 8 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சேமமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா புலேந்திரன் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், சுந்தரம்பிள்ளை, லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்து(கனடா), லதீஸ்வரன்(சேமமடு), பிரித்திகா(சேமமடு), றஜிந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானந்தன்(கனடா), நிரோசா(சேமமடு), சதீஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலநாயகி, காலஞ்சென்றவர்களான கலாநாயகி, கனகநாயகி மற்றும் புவனேந்திரன் காலஞ்சென்ற கனகேந்திரன், கதாநாயகி, தில்லைநாயகி, குகனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழில்நந்தன், இசையாளன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சேமமடுவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேமமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லதீஸ்வரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776762442
சதீஸ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477202591
Loading..
Share/Save/Bookmark