திருமதி தேவராஜா இரத்னேஸ்வரி
(கமலா)
பிறப்பு : 24 ஏப்ரல் 1956 — இறப்பு : 12 மே 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா இரத்னேஸ்வரி அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேசிங்கராஜா மற்றும் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகாயத்திரி, துவாரகா(சுவிஸ்), நிரோஷா(பிரான்ஸ்), துர்க்கா(கனடா), கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமேஷ், திகலொளிபவன், புவிவேந்தன், லோகீசன் ஆகியோரின் மாமியாரும்,

விமலநாயகி, யோகாம்பிகை(கெளரி), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவராஜா, கனகரட்ணம், காலஞ்சென்ற ஞானகி, ஞானவல்லி, நாகராஜா, சிவகுமாரன், சிவநேசன், கிருஷ்ணபவானி, நாகேஸ்வரன், ஞானேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

சஹானா, சரன், சாதனா, ரித்திகா, வர்ஷா, சனகன், அதிஷ்ரா, ஐவின், பிரனேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 14-05-2018 திங்கட்கிழமை முதல் 16-05-2018 புதன்கிழமை வரை அவரது இல்லத்திலும் 17-05-2018 வியாழக்கிழமை அன்று பொறளை ஜயவர்த்தின மலர்ச்சாலையிலும் வைக்கப்பட்டு மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.82-1/99,
இராமநாதன் தொடர்மாடி,
கொழும்பு-13
 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112335505
செல்லிடப்பேசி:+94767990302
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94770791805
Loading..
Share/Save/Bookmark