திரு வைத்திலிங்கம் வீரசிங்கம்
(புற்றடி ஐயா)
அன்னை மடியில் : 29 செப்ரெம்பர் 1934 — ஆண்டவன் அடியில் : 4 மே 2018

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு புற்றடியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 04-05-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி(அஞ்சிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரஞ்சன், நாகராணி, நாகராஜன், நாககுமாரன், நாககுமாரி, நாகதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேசன்(கண்ணன்), சிவமலர்(சிவா), பூமகள், பார்த்திபன், பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமசிவம் தங்கரத்தினம், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளசினி, துவாரகா, அபிரா, எஸ்தர், நாகஜெனி, சர்யூன், ஹீரா, சேயோன், பூஜா, டெனுஷா, லிப்ரஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு பலவகைகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி, வேறுவழிகளிலும் அனுதாபச் செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் பாஷாண உத்வாசனம் கல் எடுப்பு நிகழ்விலும், 19-05-2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் சபிண்டீகரணத்திலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கி்ன்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212251605
செல்லிடப்பேசி:+94765500475
Loading..
Share/Save/Bookmark