திருமதி விஜயலட்சுமி பாலசிங்கம்
தோற்றம் : 1 மார்ச் 1936 — மறைவு : 11 பெப்ரவரி 2018

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(காலி லதா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பவானி, சிறிபாலகாந்தன்(சுவையகம் Restaurant உரிமையாளர்- கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கொழும்பு), இராஜினி(கனடா), காலஞ்சென்ற இராஜசெல்வன்(அருணா பீடிக் கொம்பனி உரிமையாளர்- வறக்காபொல) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், சிவானந்தம், ஜெகதீஸ்வரி, சொரூபராணி, அருளானந்தம், செல்வராணி, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

திவியா, கிரிஷன், மகிஷன், யசிந்தன், அனுஷன், விதுஷா யசிகாந்தன், கஜனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருஷி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் 14-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00மணிவரை பார்வைக்காக பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிறிபாலகாந்தன் பாலசிங்கம்
தொடர்புகளுக்கு
தயாபரன் இரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777800740
சிறிபாலகாந்தன் பாலசிங்கம் — கனடா
தொலைபேசி:+14167160543
பத்மாவதி இராஜசெல்வம் — இலங்கை
தொலைபேசி:+94112554282
செல்லிடப்பேசி:+94777404008
Loading..
Share/Save/Bookmark