திருமதி இரத்தினசாமி மங்கையர்க்கரசி
(புஸ்பா, சாமி அம்மா)
மலர்வு : 26 பெப்ரவரி 1942 — உதிர்வு : 6 சனவரி 2018

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், குருநாகல் பொல்காவலை, கிளிநொச்சி, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி மங்கையர்க்கரசி அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேற்பிள்ளை, கண்ணம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தமிழ்ச்செல்வர்(JP), இரமணீஸ்வரன், இரமேஸ்வரன்(Frankfurt), தியாகேஸ்வரி, இரட்ணேஸ்வரி, காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குமாரவேல் கெங்காதரன் மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும்,

இரங்கநாயகி, வளர்மதி, கீதா, சிறினிவாசன், அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனஞ்சயன், அருந்ததி, அருண்பிரசாத், பிரவீன்குமார், துஸ்யந்தினி, தனுஷாந்தினி, தர்ஷாந்தன், அகலியா, சரணியா, றிதன், சயங்கா, சரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஷஸ்மிதா, பிரவேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 05:00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.64,
மாட்டா கொட வீதி,
வத்தளை,
கொழும்பு.

தகவல்
இரமேஸ்வரன்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773166476
இரமேஸ்வரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917681127700
Loading..
Share/Save/Bookmark